பிக்பாஸ் சென்ற ரக்ஷிதா…. வெளியே இருந்து முன்னாள் கணவர் செய்த வேலை….. குழம்பிப்போன ரசிகர்கள்…..!!!!

சின்னத்திரையில் நட்சத்திர தம்பதிகளாக வளம் வருபவர்கள் தான் ரட்சிதா மகாலட்சுமி மற்றும் தினேஷ் தம்பதியினர். விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலம் அனைவரின் நெஞ்சங்களையும் கொள்ளை அடித்தவர் நடிகை ரச்சிதா. முதல் பாகம் முடிவடைந்த பிறகு இரண்டாவது பாகத்திலும் இவர் தொடர்ந்து நடித்தார். பல்வேறு சீரியல்களில் கதாநாயகியாக நடித்து வந்துள்ளார்.

தற்போது கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் சொல்ல மறந்த கதை என்ற தொடரில் நடித்து வருகிறார். சரவணன் மீனாட்சி சீரியலில் ஜோடியாக நடித்த பிறகு தினேஷ் மற்றும் ரக்ஷிதா இருவரும். தற்போது திருமணம் ஆகி பல வருடங்கள் ஆன நிலையில் ரட்சிதா தனது கணவர் தினேஷை பிரிந்து தனியாக வாழ்ந்து வருவதாகவும் அவரை விவாகரத்து செய்ய உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்த வண்ணம்.

 

இதனிடையே ரட்சிதா மகாலட்சுமி தற்போது பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அந்த நிகழ்ச்சியில் தனது கணவர் பற்றி அவர் இதுவரை எதுவுமே பேசவில்லை. அது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் தினேஷ் ரட்சிதாவுக்கு வாழ்த்து தெரிவித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு போட்ட நிலையில் சில மணி நேரத்தில் அதனை டெலிட் செய்து விட்டார். இதனால் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த குழப்பத்தில் உள்ளனர்.