எனக்கு இரண்டாவது கல்யாணமா?…. முதல்முறையாக மனம் திறந்த பப்லு…. இணையத்தில் வைரலாகும் வீடியோ……!!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் பப்லு பிரித்விராஜ்.இவர் திரைப்படங்கள் மற்றும் சீரியல்கள் என மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் தற்போது சன் டிவியில் பெரும்பாலான சீரியல்களிலும் நடித்து அசத்தி வருகிறார். இதனுடைய சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர்,இந்த வயசிலும் தான் ஆரோக்கியமாக இருப்பதற்கு தனது மனைவிதான் காரணம் எனக் கூறி ஒரு இளம் பெண்ணை மேடையில் ஏற்றினார்.

இவருக்கு ஏற்கனவே பீனா என்ற பெண்ணுடன் திருமணம் ஆகி 25 வயதில் ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் தற்போது ஒரு இளம் பெண்ணை மனைவி என அவர் கூறியது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.இது தொடர்பாக வெளியான தகவலில் பப்லு தனது முதல் மனைவியை கருத்து வேறுபாடால் விவாகரத்து செய்து பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும் அதே சமயம் மலேசியாவை சேர்ந்த ஒரு பெண்ணுடன் நட்பாக்கி பழகி வந்ததாகவும் கூறப்பட்டது.

மலேசியாவில் பப்லு தனது தொழிலை தொடங்க அந்த பெண் தான் உதவியாக இருந்துள்ளார்.சில மாதங்களுக்கு முன்பு அந்த இளம் பெண்ணை இவர் திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த பப்லு தனது மகனை பார்த்துக் கொண்டு வருகிறார்.இந்நிலையில் திருமணம் குறித்த வதந்திக்கு பப்லு தற்போது விளக்கம் அளித்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.