“செம ஜோடி”….. முதன்முறையாக தேசிய விருது நடிகையுடன் இணையும் ஜெயம் ரவி…. படு குஷியில் ரசிகர்கள்….!! .

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் ஜெயம் ரவி. இவர் தனது தந்தையின் தயாரிப்பிலும் சகோதரர் இயக்கத்திலும் வெளிவந்த ஜெயம் என்ற திரைப்படத்தின் நடித்ததன் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார். ரவி நடித்த முதல் திரைப்படமே மக்கள் மத்தியில் பிரபலமானதால் அந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் ஜெயம் ரவி என்று அழைக்கப்படுகிறார்.

தற்போது இவர் சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வருகின்றார் . இவர் நடித்துள்ள பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஹிட் கொடுத்துள்ளனர். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் பூமி. விவசாய பிரச்சனையை மையமாகக் கொண்ட இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனைத் தொடர்ந்து மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தில் ஜெயம் ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தில் ஜெயம் ரவி நடித்து வருகின்றார். மேலும் அகிலன்,JR 30, இறைவன் உள்ளிட்ட திரைப்படத்திலும் நடித்து வருகின்றார்.

இவ்வாறு பிசியாக இருக்கும் ஜெயம் ரவி மேலும் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். சைரன் என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை இயக்குனர் ஆண்டனி பாக்கியராஜ் இயக்க உள்ளார். அதிலும் குறிப்பாக இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக தேசிய விருது வென்ற நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார். இருவரும் ஒன்றாக இணைந்து நடிக்கும் முதல் படம் இதுதான்.

மேலும் இந்த திரைப்படத்தில் நடிகை அனுபாமா பரமேஸ்வரன் மற்றும் சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.ஜிவி பிரகாஷ் இசை அமைக்க உள்ள இந்த திரைப்படத்திற்கு செல்வகுமார் ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.இப்படத்தின் மோஷன் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகின்றது.