செம மாஸ்….. இமயமலையில் ஆபத்தான வளைவில்…. அசால்டாக பைக் ஓட்டும் அஜித்…. வைரலாகும் வீடியோ….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் அஜித். இவரின் நடிப்பில் தற்போது ஏகே 61 திரைப்படம் உருவாகி வருகிறது.இதனிடையே நடிப்பையும் தாண்டி அஜித் பல்வேறு விஷயங்களில் அதிக ஆர்வம் கொண்டவர்.அண்மையில் கூட திருச்சியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடும் போட்டியில் பல்வேறு பரிசுகளை தட்டி தூக்கினார்.

அது மட்டுமல்லாமல் பைக்கின் மீதும் அதிக பிரியம் கொண்டவர் நடிகர் அஜித். சினிமாவை தாண்டி ஓய்வு கிடைக்கும் நேரத்தில் பைக்கை எடுத்துக்கொண்டு ஒரு ட்ரிப் கிளம்பி விடுவார். அவரின் மிகப்பெரிய ஆசை பைக்கில் உலகையே சுற்றிவர வேண்டும் என்பதுதான். அதன் ஒரு பகுதியாக சமீபத்தில் ஐரோப்பா மற்றும் லண்டனுக்குச் சென்று அங்கு தனது நண்பர்களுடன் பைக் ரைட் சென்றுள்ளார்.

லண்டன் ரிப்பை முடித்த கையோடு இந்தியா திரும்பி அஜீத் தற்போது ஏகே 61 படத்தின் படப்பிடிப்பில் நடித்து வருகிறார். அண்மையில் விசாகப்பட்டினத்தில் சூட்டிங் முடிந்ததும் லடாக் சென்ற நடிகர் அஜித் அங்கிருந்து தனது நண்பர்களுடன் மீண்டும் பைக் ரைட் சென்றுள்ளார். அதாவது பைகிலேயே இமயமலையை சுற்றிவரும் அவரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் அவ்வபோது வெளியாகி கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் இமயமலையில் நடிகர் அஜித் தனது பைக்கில் ரைட் செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இமயமலைக்கு செல்லும் வழியில் ஆபத்தான மறைவுகளில் அஜித் செல்லும் இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.