தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள், சின்னத்திரை விருதுகள், அரசு எம் ஜி ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.இந்த விழா நாளை சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ள நிலையில் இந்த விருது குறித்த பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் சிறந்த பணத்திற்கான விருதுகளை பெறும் படங்களின் பட்டியல் இதில் பார்க்கலாம்.

2009ஆம் ஆண்டுக்கான சிறந்த படங்கள்
1.பசங்க, 2.மாயாண்டி குடும்பத்தார்கள், 3.அச்சமுண்டு அச்சமுண்டு
2010ஆம் ஆண்டுக்கான சிறந்த படங்கள்
1.மைனா, 2.களவாணி, 3.புத்ரன்
2011ஆம் ஆண்டுக்கான சிறந்த படங்கள்
1.வாகை சூடவா, 2.தெய்வத்திருமகள், 3.உச்சிதனை முகர்ந்தால்
2012ஆம் ஆண்டுக்கான சிறந்த படங்கள்
1.வழக்கு எண் 18/9, 2.சாட்டை, 3.தோனி
2013ஆம் ஆண்டுக்கான சிறந்த படங்கள்
1.ராமனுஜன், 2.தங்கமீன்கள், 3.பண்ணையாரும் பத்மினியும்
2014ஆம் ஆண்டுக்கான சிறந்த படங்கள்
1.குற்றம் கடிதல், 2.கோலி சோடா, 3.நிமிர்ந்து நில்

அடுத்து 2009 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட சிறந்த நடிகர்களுக்கான பட்டியல்:
2009 -கரண் (மலையன்), 2010 -விக்ரம் (ராவணன்), 2011 -விமல் (வாகை சூட வா)
2012- ஜீவா (நீதானே என் பொன்வசந்தம்), 2013- ஆர்யா (ராஜா ராணி)
2014- சித்தார்த் (காவியத்தலைவன்)
சிறந்த சின்னத்திரை தொடர்கள்:
2010 -உறவுக்கு கை கொடுப்போம், 2011- சாந்தி நிலையம், 2012- இரு மலர்கள்,
2013 -வாணி ராணி