செம வாய்ஸ்…. சூர்யாவின் சகோதரி பிருந்தா பாடி அசத்திய பாடல்…. வீடியோவை பார்த்து வாயைப்பிளந்த ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் 80களில் தொடங்கி இன்று வரை பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் சிவகுமார். இவரின் மகன்கள் சூர்யா மற்றும் கார்த்திக் இருவருமே தமிழ் சினிமா உலகில் டாப் நடிகர்களாக உள்ளனர்.இவர்களின் நடிப்பில் வெளியாகும் படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு மற்றும் வசூலை பெற்றுக் கொண்டிருக்கிறது.

தந்தையைப் போலவே இருவரும் சினிமாவில் முன்னணி நடிகர்களாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனிடையே சிவகுமாருக்கு மகன்கள் மட்டுமல்லாமல் பிருந்தா என்ற ஒரு மகளும் உள்ளார்.

சூர்யா மற்றும் கார்த்திக் இருவருக்கும் சகோதரி தான் இவர். சிவக்குமார் தனது மகளை சினிமாத்துறைக்கு கொண்டு வரவில்லை. அதனால் பிருந்தா படிப்பு மற்றும் குடும்பம் என செட்டில் ஆகிவிட்டார். இருந்தாலும் அவர் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார்.

அவ்வகையில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். அதன்படி அண்மையில் இவர் பாடிய பாடல் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனைப் பார்த்து ரசிகர்கள் பலரும் இவருக்கு இப்படி ஒரு இனிமையான குரலா? என்று ஆச்சரியப்படும் அளவிற்கு பாடலை பாடிய அசத்தியுள்ளார்.

https://youtu.be/5TOHELZ2QzU