சீமந்தம் விழாவில் அந்த பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட சீரியல் நடிகை ஆனந்தி…. இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ….!!!!

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான சீரியல் நடிகை தான் ஆனந்தி. இவர் சீரியல்களில் மட்டுமல்லாமல் டான்ஸர் ஆகவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற தொடரில் நடித்ததன் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து விஜய் டிவியின் ஜோடி நம்பர் ஒன் மற்றும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை கில்லாடி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று உள்ளார்.

இந்த நிகழ்ச்சிகளின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் அடுத்தடுத்து பல சீரியல்களிலும் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார்.இப்படி சினிமாவில் பிஸியாக இருந்த இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு அஜய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தொகுப்பாளராகவும் விளங்கினார்.

மேலும் தாரை தப்பட்டை, ரௌத்திரம், மீகாமன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து அசத்திய இவர் கள்ளிக்காட்டு பள்ளிக்கூடம், ராஜ பார்வை மற்றும் அம்மன் உள்ளிட்ட பல சீரியல்களிலும் நடித்துள்ளார்.இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல சீரியல் நடிகை என்ற பெயரை பெற்றார். இவருக்கு திருமணம் முடிந்து ஆறு வயதில் ஒரு மகன் உள்ள நிலையில் தற்போது இவர் மீண்டும் கர்ப்பமாக உள்ளார்.

 

சமூக வலைத்தளங்களில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம். அவ்வகையில் இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்துள்ள நிலையில் இவரின் சீமந்தம் விழாவில் நடனமாடிய வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.