“சான்சே இல்ல அவ்வளவு அழகு”…. அப்படியே லேடி சூப்பர் ஸ்டார் மாதிரியே…. சேலையில் ரசிகர்களை சொக்க வைக்கும் வாணி போஜன்….!!!!

சின்னத்திரையில் சீரியல் நடிகையாக அறிமுகமாகி பிரபலமானவர்தான் வாணி போஜன். முதன் முதலில் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் என்ற சீரியலில் அறிமுகமானார். அந்த சீரியலில் சத்யா என்ற கதாபாத்திரத்தில் ஒரு தைரியமான பெண்ணாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். அதன் பிறகு வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தன.

அதன்படி அசோக் செல்வன் மற்றும் ரித்திகா சிங் நடிப்பில் வெளியான உவமை கடவுளே என்ற திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக வாணி போஜன் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பகைவனுக்கு அருள்வாய்,ஊர் குருவி மற்றும் காசிமேடு போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் வெப் சீரிஸ் நடிப்பதிலும் வாணி போஜன் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். சின்னத்திரையில் அறிமுகமான நடிகை தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதனிடையே சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் தன்னுடைய புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுடன் உரையாடுவதை வழக்கமாகக் கொண்டவர். தற்போது சேலையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்றை இணையத்தில் வைரலாகி வருகிறது. மேசையில் அமர்ந்தபடி க்யூட் லுக்கிங் சமீபத்திய அழகிய போஸ்ட்களில் பார்ப்பதற்கு லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா போலவே இருப்பதாக ரசிகர்கள் பலரும் கமாண்ட் செய்து வருகிறார்கள்.