ஹெலிகாப்டரில் மாஸ் என்ட்ரி கொடுத்த சிம்பு…. மிரண்டு போன கோலிவுட்…. இணையத்தை தெறிக்க விடும் வீடியோ…..!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சிம்பு. அவரின் நடிப்பில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் அச்சம் என்பது மடமையடா திரைப்படங்களை தொடர்ந்து இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு தற்போது மூன்றாவது முறையாக நடித்துள்ள படம் வெந்து தணிந்தது காடு. இந்த திரைப்படத்தில் முத்து என்ற கேரக்டரில் சிம்பு நடித்துள்ளார்.

இப்படத்தின் போஸ்டர்,பாடல்கள் மற்றும் டீசர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.இதில் சிம்புவை கிராமம் மற்றும் நகரம் என இரு வேறு கெட்டப்பில் பார்ப்பதற்கு ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றன. சிம்புவின் அம்மாவாக ராதிகா நடித்துள்ளார். குஜராத் நடிகை சித்தி இட்னானி கதாநாயகியாக நடித்துள்ளார்.

ஏ ஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவிற்கு கிட்டத்தட்ட படக்குழு மூன்று கோடி செலவில் பிரம்மாண்டமாக செட் அமைத்துள்ளது. இந்நிலையில் படத்தின் நாயகன் சிம்பு ஹெலிகாப்டர் மூலம் இசை வெளியீட்டு விழாவிற்கு மாஸ் என்று கொடுத்தார்.

இதனைப் பார்த்து ரசிகர்கள் மட்டுமல்லாமல் கோலிவுட் பிரபலங்களை மிரண்டு போனார். மிக பிரம்மாண்டமாக ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. இப்படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் இடம் பெற்றுள்ள நிலையில் அந்த ஐந்து பாடல்களில் இரண்டு பாடல்களை ஏ ஆர் ரகுமான் பாடியுள்ளார் . மேலும் ஒரு பாடலை சிம்பு பாடியுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.