இவரா இப்படி?…. நடிகர் பிரசாந்த் மீது இலங்கை பெண் பரபரப்பு புகார்…. என்ன நடந்தது….????

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்பவர் தான் நடிகர் பிரசாந்த். தமிழில் ஜீன்ஸ், கண்ணெதிரே தோன்றினாள் மற்றும் ஜோடி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவர் நடித்துள்ள பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஹிட் கொடுத்துள்ளனர். அவரின் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள திரைப்படம் அந்தகன்.

இந்நிலையில் நடிகர் பிரசாந்த் மீது இலங்கையை சேர்ந்த குமுதினி என்ற பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திடீரென பாண்டி பஜார் காவல் நிலையத்திற்கு வந்திருந்த அந்த பெண் நடிகர் பிரசாந்த் மீது பண மோசடி புகாரை வாய் வழியாக அளித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தில் விமான ஊழியராக பணியாற்றி வந்த அந்த பெண்ணுடன் நட்பு கொண்ட நடிகர் பிரசாந்த் அவரிடம் 10 லட்சம் ரூபாய் வரை ஏமாற்றி பண மோசடி செய்ததாக அந்த பெண் குற்றம் சாட்டியுள்ளார். அது மட்டுமல்லாமல் மேலும் சில புகார்களையும் அவர் முன் வைத்துள்ளார்.

Prashanth at Saahasam Audio Launch

இதனைத் தொடர்ந்து அந்தப் பெண் சொல்வதில் எந்த உண்மையும் இல்லை என்றும் வேண்டுமென்றே தேரை கெடுக்க செய்யும் சதி என்று பிரசாந்த் தரப்பு கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருந்தாலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.திடீரென பிரசாந்த் மீது பெண் ஒருவர் பண மோசடி புகார் அளித்துள்ளது கோலிவுட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.