சுந்தர பாண்டியன் பட நடிகையா இது?…. இவருக்கு இவ்வளவு பெரிய மகளா?…. இணையத்தில் வைரலாகும் குடும்ப புகைப்படம்….!!!!

தமிழில் வெளியான சுந்தரபாண்டியன் மற்றும் ரம்மி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை ஜானகி தேவி. இவர் தற்போது சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சன் டிவியில் கயல் மற்றும் திருமகள் உள்ளிட்ட பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். இந்நிலையில் இவர் தனது கணவர் மற்றும் மகளுடன் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் இவருக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கா என வாயடைத்து புகைப்படத்தை இணையத்தில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.