ராஜா ராணி 2 சீரியல் நடிகரின் வீட்டில் விசேஷம்…. இணையத்தை கலக்கும் க்யூட் Couple வீடியோ….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் ராஜா ராணி 2. இந்த தொடரில் சரவணன் என்ற கதாபாத்திரத்தில் சித்து நடித்து வருகிறார்.சந்தியா கதாபாத்திரத்தில் ஆலியா மானசா நடித்து வந்த நிலையில் தற்போது அவர் சீரியலில் இருந்து விலகியதால் அவருக்கு பதிலாக ரியால் என்பவர் சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இப்படி சீரியல்களில் பல மாற்றங்கள் நடந்தாலும் சீரியல் நன்றாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. தினம்தோறும் புதுவித திருப்புங்களுடன் சீரியல் விறுவிறுப்பாக ஓடி கொண்டு இருக்கிறது. இந்த சீரியலில் ஹீரோ சரவணன் இன் தம்பி செந்தில் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் பாலாஜி தியாகராஜன். இவர் சீரியலில் மட்டுமல்லாமல் பல குறும்படங்களிலும் நடித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் யூட்யூப் மற்றும் வெப் சீரிஸ் என பலவற்றில் நடித்து வருகிறார். இதனிடையே பாலாஜி தியாகராஜனுக்கு அண்மையில் திருமணம் நடந்து முடிந்தது. அவரின் திருமணத்தில் பல திரை பிரபலங்களும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

 

இந்நிலையில் பாலாஜியின் மனைவிக்கு தாலி பிரித்து கோர்க்கும் சடங்கு நடைபெற்ற நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.