சத்யராஜ் மகளுக்கு இப்படி ஒரு மனசா?…. தமிழகம் முழுவதும் மாணவர்களுக்கு…. குவியும் பாராட்டு….!!!!

தமிழ் சினிமாவில் தற்போது வரை சிறந்த நடிகராகவும் வில்லனாகவும் கலக்குபவர் நடிகர் சத்யராஜ். இவர் பல வகையான திரைப்படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் பல மொழிகளிலும் நடித்துள்ளார். அவர் அந்த காலத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் கொடி கட்டி பறந்தவர். தற்போதும் கூட பல படங்களில் நடித்து வருகிறார். ஆனால் அப்போது இருந்த நடிப்பின் வலிமை இப்போதும் சத்யராஜ் நடிப்பில் உள்ளது.

சத்யராஜுக்கு ஒரு மகளும் உள்ளார். படித்து முடித்து சில மாதங்களிலேயே இந்தியாவிலுள்ள டாப் நியூட்ரிஷன் ஒருவர்களில் மாறிவிட்டார் சத்யராஜ் மகள் திவ்யா. இவர் பள்ளிக்கூடம் செல்வதற்கு அனுமதி கேட்டு கல்வி அமைச்சரிடம் கேட்டுள்ளார். இவரின் இந்த திட்டத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கிரீன் சிக்னல் காட்டியுள்ளார். திவ்யா பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்ய திட்டமிட்டுள்ளார்.

தற்போது பள்ளி மாணவர்களுக்கு அவ்வளவு ஊட்டச்சத்து அதிகமாக இருப்பதில்லை. இந்தியாவில் பெரும்பாலான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடுடன் உள்ளன. அப்படி சரியான ஊட்டச்சத்து கிடைக்காமல் இந்தியாவில் இருக்கும் குழந்தைகளை மீட்டெடுக்க சத்யராஜின் மகள் திவ்யா அட்சய பாத்திரம் என்ற அறக்கட்டளையின் மூலமாக தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் காலை உணவை இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளாராம். இந்த செய்தி சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.