விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா என்ற சீரியலில் வெண்பா என்ற வில்லி கதாபாத்திரத்தில் ஃபரீனா நடித்து வருகிறார். இவர் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பது வழக்கம். தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரசிகர்கள் மத்தியில் அவர் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் இவர் மிஸ்டர் அண்ட் மிஸ்டர் சின்னத்திரையில் சீசன் 4 நிகழ்ச்சியில் தனது கணவர் உபைத் ரகுமானுடன் கலந்து கொண்டு கலக்கி வருகிறார். இந்த வாரம் ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சியில் ஃபரீனாவின் கணவர் அவருக்கு ஒரு இன்ப அதிர்ச்சி பரிசை கொடுத்து அரங்கையே அதிர வைத்துள்ளார்.