விஜய் டிவியில் பல வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் புதிய புதிய தலைப்பில் ஒளிபரப்பாகி வருகிறது. பல வருடங்களாக வெற்றிப்பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது இந்த நிகழ்ச்சி. அதற்கு மிகப்பெரிய காரணம் என்னவென்றால் நீயா நானா நிகழ்ச்சியின் ஆங்கர் கோட் கோபிநாத் என்று சொல்லலாம். மொத்த நிகழ்ச்சியையும் தனது கட்டுக்குள் வைத்து பிரமிக்க வைக்கும் வகையில் நடத்துவார். நிகழ்ச்சியில் விவாதங்கள் அனைத்தையும் முடித்த பிறகு தனக்கு உரிய பாணியில் பைனல் டச் கொடுப்பார்.

இந்நிலையில் அடுத்த வாரம் சுவாரஸ்யமான ஒரு தலைப்புடன் நீயா நானா நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. அதில் பெண் ஒருவர் பார்லருக்கு சென்று பார்லர் வாங்க திட்டம் போட்டு கணவரிடம் கேட்கிறார். இந்த சம்பவம் குறித்து நீயா நானாவில் கோபிநாத் இடம் தெரிவித்துள்ளார். அதனால் ஒரு நிமிடம் கோபிநாத் அதிர்ச்சியில் உறைந்து நின்றார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.