தமிழ் சினிமாவில் கடந்த 2015 ஆம் ஆண்டு இயக்குனர் முத்தையா இயக்கத்தில் வெளியான திரைப்படம் கொம்பன். கிராமத்துக் கதையை மையப்படுத்திய அந்தத் திரைப்படத்தில் நடிகர் கார்த்திக் நடித்திருந்தார். அந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது ஏழு வருடங்கள் கழித்து மீண்டும் முத்தையா மற்றும் கார்த்திக் கூட்டணி இணைந்துள்ளது.

அதன்படி முத்தையா இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள விருமன் திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தின் மூலமாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் முதன் முதலாக ஹீரோயினியாக களமிறங்குகிறார்.

அது மட்டுமல்லாமல் பிரகாஷ்ராஜ், கருணாஸ், ராஜ்கிரன் உள்ளிட்டோர் பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் மதுரையில் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக சூர்யா கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து படத்தை பிரபலப்படுத்தும் வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த படத்தின் மூலமாக அதிதி சங்கர் தமிழ் சினிமாவுக்கு ஹீரோயினியாக அறிமுகமாகிறார். இவர் தமிழக இளைஞர்களின் க்ரஷ் லிஸ்டில் புதிதாக இடம் பெற்றுள்ளார். நடிகை மட்டுமின்றி பாடகையாகவும் தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளார். தற்போது விருமன் படத்தின் பிரமோஷன்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தற்போது விரும்பன் பட குழுவினர் மலேசியாவில் உள்ளனர்.

அந்தப் புகைப்படங்கள் அனைத்தும் தற்போது இணையத்தில் வெளியாகி வரும் நிலையில் புடவையில் அசத்தியுள்ள அதிதி புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அதனை ரசிகர்கள் இணையத்தில் அதிக அளவு ஷேர் செய்து வருகிறார்கள்.
