“விருமன் திரைப்படம்”…. இளையராஜா பெரிய சர்ப்ரைஸ்…. படம் வேற லெவல் இருக்கப்போகுது….!!!!

தமிழ் சினிமாவில் கடந்த 2015 ஆம் ஆண்டு இயக்குனர் முத்தையா இயக்கத்தில் வெளியான திரைப்படம் கொம்பன். கிராமத்துக் கதையை மையப்படுத்திய அந்தத் திரைப்படத்தில் நடிகர் கார்த்திக் நடித்திருந்தார். அந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது ஏழு வருடங்கள் கழித்து மீண்டும் முத்தையா மற்றும் கார்த்திக் கூட்டணி இணைந்துள்ளது.

அதன்படி முத்தையா இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள விருமன் திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தின் மூலமாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் முதன் முதலாக ஹீரோயினியாக களமிறங்குகிறார்.

அது மட்டுமல்லாமல் பிரகாஷ்ராஜ், கருணாஸ், ராஜ்கிரன் உள்ளிட்டோர் பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படத்தில் “கஞ்சா பூ கண்ணால”என்ற பாடலுக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.  இந்தப் பாடல் சமீபத்தில் பட்டி தொட்டி எல்லாம் வைரலானது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் மதுரையில் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக சூர்யா கலந்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து படத்தை பிரபலப்படுத்தும் வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் விருமன்பட குழுவுக்கு இளையராஜா சர்ப்ரைஸ் கொடுத்ததாக நடிகர் கார்த்தி கூறியுள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா முடிந்த நிலையில், படத்தின் டைட்டில் பாடல் மட்டும் இன்னும் வெளியாகவில்லை.

இந்தப் பாடலை இளையராஜா பாடியுள்ளார்.இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் குரலில் உருவாகியுள்ள அந்த பாடல் மனதை உருகிவிடும் என்று கார்த்தி குறிப்பிட்டுள்ளார். இது படத்திற்கு பக்க பலமாக இருக்கும் எனவும் படக்குழுவினர் நம்புகின்றனர்.