பிரபல நடிகையுடன் ஃபிளைட்டில் பறந்த தளபதி விஜய்…. செம குஷியில் போட்டோவை இணையத்தில் வெளியிட்ட நடிகை….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய்.இவரின் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் உருவாக்கி வரும் இந்த திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

அது மட்டுமல்லாமல் பிரகாஷ்ராஜ் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் பலரும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இந்தத் திரைப்படம் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்த நிலையில் படபிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் பிரபல நடிகை வரலட்சுமி சரத்குமார் அவரின் சமூக வலைதள பக்கத்தில் நடிகர் விஜயுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தற்போது பதிவிட்டுள்ளார். அத்துடன் அந்தப் புகைப்படங்கள் குறித்து சுவாரசியமான தகவல் ஒன்றையும் அவர் பகிர்ந்து உள்ளார்.

அதாவது இதுவரை இதுபோல் விமானத்தில் தான் பயணித்தது இல்லை என்றும் தளபதி விஜய்யின் அருகில் அமர்ந்து பயணித்தேன்,அவருடன் பிளைட்டில் அரட்டை அடித்து பேசி சிரித்து வந்ததாக மகிழ்ச்சியுடன் அவர் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.