தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக பலம் வந்து கொண்டிருப்பவர் சின்ன குஷ்பூ என்று பெயரை பெற்றுள்ள நடிகை ஹன்சிகா. இவர் முதலில் நடிக்க வந்தபோது கொழுக் முழுக் என்று இருந்ததால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். ஆரம்பத்தில் முன்னணி நடிகையாக பலம் வந்த இவர் ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் இல்லாமல் திணறினார். இவர் குண்டாக இருக்கிறார் இவருக்கு சரியாக நடிப்பு வரவில்லை என்று பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இதனிடையே விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு ஹன்சிகா உடல் எடையை குறைத்த நிலையில் அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. தமிழ் மற்றும் தெலுங்கு என அடுத்தடுத்து சிறப்பான படங்களில் நடித்து வந்த இவர் விஜய் மற்றும் ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

தற்போது ஹன்சிகா நடிப்பில் பார்ட்னர், மை நேம் இஸ் சுருதி, ரவுடி பேபி உள்ளிட்ட படங்கள் உருவாக உள்ளன. சமீபத்தில் இவரின் 50வது படமான மகா திரைப்படம் வெளியானது. நடிப்பில் பிசியாக இருக்கும் இவர் எப்போதுமே சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பது வழக்கம். அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற பிலிம் பேர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் ஹன்சிகா கலந்து கொண்டார். அதில் மெரும் நிற கவுனில் வந்து அனைவரையும் அசத்தினார். ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு தொடையழகை முழுமையாக காட்டி கூடுதல் கவர்ச்சியை ரசிகர்கள் மத்தியில் வெளிப்படுத்தினார்.அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
