வாரிசு பட சூட்டிங் நடுவே தளபதி விஜய் செய்த செயல்…. இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்….

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பலம் வருபவர் தளபதி விஜய். இவர் அண்மையில் நடித்த பீஸ்ட் திரைப்படம் தோல்வியை தழுவிய நிலையில் அடுத்ததாக வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து முடிந்தது.

அதனைத் தொடர்ந்து படப்பிடிப்பு ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற நிலையில் துறைமுகத்தில் நடந்த படைப்பிடிப்பில் அதிரடி ஸ்டண்ட் காட்சிகள் படமாக்கப்பட்டதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின.

இந்தத் திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ள நிலையில் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் வாரிசு திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக களம் இறங்குகிறார். அதனால் மேலும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் படத்தின் சூட்டிங்-க்கு நடுவே தளபதி விஜய் ஹைதராபாத்தில் மகேஷ் பாபுவுக்கு சொந்தமான திரையரங்கில் நந்தமுரி கல்யாண் ராம் நடிப்பில் வெளியாகி உள்ள பிம்பிசாரா படத்தை பார்த்து உள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வரும் நிலையில் ரசிகர்கள் அதனை அதிக அளவு ஷேர் செய்து வருகிறார்கள்.