தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி என்று அனைவராலும் அறியப்படும் நடிகர் விஜய். இவரின் அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் ஹிட் கொடுக்கும். அவ்வகையில் இவரின் அடைப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் பீஸ்ட்.

ஆனால் அந்த திரைப்படம் எதிர்பார்த்து அளவிற்கு ஓடவில்லை. இதனைத் தொடர்ந்து தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார் விஜய். மிகப்பெரிய எதிர்பார்ப்பை எதிர வைத்து வரும் இந்த திரைப்படம் வருகின்ற 2003 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

நடிகர் விஜய்யின் தங்கை வித்யா உடல் நலக்குறைவு காரணமாக சிறு வயதிலேயே உயிரிழந்து விட்டார். இதனைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவான பல படங்களில் தங்கை சென்டிமென்ட் காட்சிகள் அதிக அளவில் இடம் பெற்றிருக்கும். அப்படி அதிக அளவு தங்கை மற்றும் அண்ணன் பாசத்தை வெளி கொணர்ந்த படம் தான் வேலாயுதம்.

அந்தப் படத்தில் விஜயின் தங்கையாக நடிகை சரண்யா நடித்திருப்பார். அதில் இவர்கள் இருவரின் பாசம் காண்போரை கண் கலங்க வைக்கும். நடிகை சரண்யா வேலாயுதம் படத்தை தவிர யாரடி நீ மோகினி மற்றும் வெண்ணிலா கபடி குழு ஆகிய படங்களில் நடித்துள்ளார்.தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளிலும் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை சரண்யா மோகன் தனது மகளுடன் எடுத்துக் கொண்ட அழகான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
