அம்மாடியோ….. இவ்வளவு பிரம்மாண்டமான வீடா?….. இணையத்தில் வைரலாகும் லெஜன்ட் சரவணன் வீடு இதோ…!!!!

ஜோடி ஜெர்ரி இயக்கத்திலும் தொழிலதிபர் சரவணன் நடித்துள்ள தி  லெஜன்ட் திரைப்படம் நேற்று வெளியானது. தமிழ், தெலுங்கு, இந்தி,மலையாள மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் மிகுந்த பொருட்செலவில் மிக பிரம்மாண்டமாக உருவான இந்த திரைப்படம் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 2500 திரையிடங்களில் வெளியிடப்பட்டது.

தமிழகத்தில் 800க்கும் அதிகமான திரையரங்குகளில் தி  லெஜெண்ட் திரைப்படம்  வெளியானது. இந்த படத்தைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் பலவிதமான கமெண்ட்களை இணையத்தில் தெறிக்க விட்டு வருகிறார்கள். இந்த படம் வெளிவந்த நான்கு நாட்களில் முடிவில் சுமார் 6.5 கோடி ரூபாய் வரை பாக்ஸ் ஆபீஸ் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியது.

இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக சூப்பர் ஹீரோ படத்தில் சரவணன் அருள் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திரை உலக நட்சத்திரங்களின் சொந்த வீட்டு புகைப்படங்கள் அவ்வபோது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் தற்போது லெஜன்ட் சரவணன் அருளின் சொந்த வீட்டின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. கோடி கணக்கில் கட்டப்பட்டு மிக பிரம்மாண்டமாக காட்சி அளிக்கும் கடல் போன்ற வீட்டின் புகைப்படம் இதோ….