மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்ற அழகி…. காளிதாஸ் ஜெயராமின் காதலியா இது?…. குடும்பத்துடன் ஓணம் கொண்டாடிய புகைப்படம்….!!!!

தற்போது மலையாள திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் காளிதாஸ் ஜெயராம். மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் பிரபலமான ஜெயராமனின் மகன் தான் இவர். காளிதாஸ் ஜெயராம் தற்போது மலையாளத்தை விட தமிழில் முக்கியத்துவம் கொடுத்து பல படங்களில் நடித்து வருகிறார்.

கடந்த சில வருடங்கள் வரை இவருக்கு மிகப்பெரிய பிரேக் எதுவும் கிடைக்காத நிலையில் கடந்த வருடம் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான தங்கம் என்கிற அந்தாலஜி படம், கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் கமலின் மகனாக நடித்தது என தற்போது இவரது திரையுலக பயணத்தில் ஏற்றம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான நட்சத்திரம் நகர்கிறது என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார்.

இந்நிலையில் இவர் தனது குடும்பத்துடன் ஓணம் பண்டிகை கொண்டாடிய புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்தார். அந்த புகைப்படத்தில் ஜெயராம் குடும்பத்துடன் குடும்ப உறுப்பினர்களை தவிர ஒரு இளம் பெண்ணும் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டிருந்தார். அந்தப் பெண் யார் என்று அனைவர் மனதிலும் கேள்வி எழுந்த நிலையில் அவரைப் பற்றிய விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது அவர் தாரணி காளிங்கராயர் என்ற மாடல் தான். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு மிஸ் தமிழ்நாடு பட்டம் என்ற அழகி என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து காளிதாஸ் ஜெயராமின் காதலியாக இவர் இருக்கலாம் என பலரும் இணையத்தில் கமண்ட் செய்து வருகிறார்கள்.