“எப்போதுமே எங்கள் இலக்கு தமிழ்நாடு தான்”…. வைரலாகும் இளையராஜா – ஏ.ஆர்.ரகுமான் வீடியோ….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி இசை அமைப்பாளர் ஆன ஏ ஆர் ரகுமான் இசைஞானி இளையராஜாவுடன் விமான நிலையத்திலிருந்து ஒரு இன்ஸ்டாகிராம் வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் ஒரு பேட்டரி வாகனத்தில் இருவரும் அமர்ந்து செல்கின்றனர்.

ஹங்கேரி நாட்டிற்கு அண்மையில் சுற்றுப்பயணம் சென்றிருந்த இளையராஜா அங்கு அவர் தங்கியிருந்த விடுதி அருகில் இருந்து எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை தனது twitter பக்கத்தில் வெளியிட்டார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் அதிக அளவு பகிரப்பட்ட நிலையில், தற்போது அண்மையில் இசை புயல் ஏ ஆர் ரகுமான் அமெரிக்காவிற்கு சென்று இருந்தார்.

இந்நிலையில் பேட்டரி வாகனம் ஒன்றில் இளையராஜாவுடன் தான் பயணிக்கும் வீடியோ ஒன்றை ஏ ஆர் ரகுமான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவை பற்றி அவர் கூறுகையில், நாங்கள் இருவரும் வெவ்வேறு கண்டங்களில் இருந்து திரும்புகிறோம். ஆனால் எப்போதுமே எங்கள் இலக்கு தமிழ்நாடு தான் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

ARR இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@arrahman)

அது மட்டுமல்லாமல் தான் அமெரிக்காவில் இருந்தும் இளையராஜா ஹங்கேரியிலிருந்தும் திரும்புவதாக அவர் அந்த பதிவில் குறிப்பிட்டார். மேலும் அந்த போஸ்டில் இளையராஜாவை டேக் செய்துள்ளார் ஏ ஆர் ரகுமான். இந்த பதிவு இணையத்தில் பகிரப்பட்ட சில மணி நேரத்திலேயே ஏழு லட்சத்திற்கும் அதிகமானோர் அந்த வீடியோவை பார்வையிட்டு உள்ள நிலையில் தற்போது இணையத்தில் அந்த வீடியோ தீயாய் பரவி வருகிறது.