தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பலம் வந்து கொண்டிருக்கும் தனுஷ் தமிழ் சினிமாவையும் தாண்டி பாலிவுட்டில் நுழைந்துள்ளார். அவ்வகையில் அவரின் நடிப்பில் அண்மையில் வெளியான தி கிரேட் மேன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சில மாதங்களாக தனது திரைப்படங்கள் ஹிட் கொடுக்காததால் வருத்தத்தில் இருந்து வந்த தனுஷ் அதனை ஏறக்குறைய தற்போது சரி செய்து விட்டார்.

இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கிட்டத்தட்ட அந்த திரைப்படம் 100 கோடி வசூலை தாண்டி சாதனை படைத்துள்ளது. தனுஷ் அண்மையில் தனது மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்த நிலையில் அதன் பிறகு தனது கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

இதனிடையே அவர் ஒரு பெண்ணின் தோல் மீது கை போட்டு இருக்கும் புகைப்படம் ஒன்று சில வாரங்களுக்கு முன்பு இணையத்தில் வெளியானது. திருச்சிற்றம்பலம் படத்தில் தாய் கிழவி பாடலில் தனுஷ் உடன் நடனமாடிய பெண் தான் ஹேமா தயால். தனுஷ் நடித்த பெரும்பாலான படங்களில் இவர் நடனமாடியுள்ளார்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
மேலும் அவர் தமிழ் சினிமாவில் டான்ஸராக இருப்பது மட்டுமல்லாமல் அசிஸ்டன்ட் நடன இயக்குனராகவும் தற்போது பணியாற்றி வருகின்றார். அது மட்டுமல்லாமல் சீரியலிலும் சிறிய சிறிய நூலில் நடித்து வருகின்றார். இந்நிலையில் அவர் நடிகர் மகேஷ்பாபுவின் சர்க்கார் வாரி பட்டா படத்தில் பணியாற்றிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது .
