தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்,இசையமைப்பாளர் மற்றும் பாடகர் என பன்முகம் கொண்ட கலைஞராக பலம் வந்து கொண்டிருப்பவர் பிரேம்ஜி அமரன். இசையமைப்பாளர் கங்கை அமரனின் இரண்டாவது மகன்தான் இவர். இவரின் அண்ணன் வெங்கட் பிரபு பிரபல இயக்குனர். இவர் இயக்கம் அனைத்து படங்களிலும் கட்டாயம் பிரேம்ஜி இருப்பார்.

தனது தம்பிக்காகவே கதையில் ஒரு கதாபாத்திரத்தை கொண்டு வந்து சேர்க்கும் வேலையை வெங்கட் பிரபு தொடர்ந்து செய்து வருகின்றார். தற்போது பிரேம்ஜிக்கு 43 வயதாகிறது.ஆனால் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார்.இது குறித்து அவரிடம் பலமுறை கேட்டும் தான் முரட்டு செங்கல் என்று பதில் அளித்தார்.வீட்டில் பலமுறை வற்புறுத்தியும் தனக்கு திருமண ஆசை இல்லை என்று கூறி வருகிறார்.

இந்நிலையில் தற்போது பிரேம்ஜிக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. அதற்கு காரணம் என்னவென்றால் வினைதா சிவக்குமார் என்ற பாடகையுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருப்பது தான்.

பியார் பிரேமா யுவன் என டீ சர்ட்டில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். பிரபல பாடிகையுடன் பிரேம்ஜி நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகிய நிலையில் ரசிகர்கள் பலரும் அதனை அதிக அளவு ஷேர் செய்து தவறுக்கு திருமணமாய் என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.