கருப்பு வெள்ளையில் படங்கள் வந்துக்கொண்டிருந்த 50,60 ஆண்டுகளுக்கு முன் அன்றைய ஹீரோக்களின் சம்பளமே, சில நூறுகளாக தான் இருந்தது. எம்ஜிஆர் சிவாஜி படங்கள் பெரிய அளவில் ஹிட் ஆன நிலையில், ஆயிரங்களில் அவர்களது சம்பளம் மாறியது. அதற்கு பிறகு, ஈஸ்ட்மென் கலர்களில் படங்கள் வெளிவர துவங்கிய காலகட்டத்தில்தான், லட்சங்களில் சம்பளம், ஹீரோக்களுக்கு கிடைத்தது. அதிலும், நடிகைகளின் சம்பளம் அதில், பாதி கூட இருக்காது சில முன்னணி நடிகையர் மட்டுமே, லட்சங்களில் சம்பளம் பெற்றனர்.ஆனால், இன்றைய சூழலில் நடிகர்களுக்கு சமமான அளவில், நடிகைகளும் அதிகளவில் சம்பளம் வாங்குகின்றனர். அதிலும் குறிப்பாக திரிஷா, நயன்தாரா, மீனா, குஷ்பு, அனுஷ்கா, ரம்பா, தேவயானி, ரம்யா கிருஷ்ணன் போன்றவர்கள் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் பெற்றவர்களாக இருக்கின்றனர். அதிலும், சமீபத்தில் வெளியான இந்த படத்துக்கு, கதாநாயகிக்கு வழங்கப்பட்ட சம்பளம், ரசிகர்களை மிகவும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.இயக்குநர் அகமது இயக்கத்தில், ஜெயம் ரவி, நயன்தாரா நடித்த இறைவன் என்ற படம், இரு தினங்களுக்கு முன் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் கதாநாயகியாக நடித்த நயன்தாராவின் சம்பளம் மட்டும் 8 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. முக்கியத்துவம் இல்லாத இந்த கேரக்டரில், சில லட்சங்கள் கொடுத்து புதுமுக நடிகை ஒருவர் நடிக்க வேண்டிய கேரக்டரில், நயன்தாராவை நடிக்க வைத்து, 8 கோடி ரூபாய் தண்டச்செலவு என பலரும், கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இறைவன் படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறவில்லை என்பதும் இதில் கவனிக்கத்தக்கது.