என்னது, சென்சார் போர்டுக்கு இவரும் லஞ்சம் கொடுத்தாரா? – பிரபல இயக்குநர் பேச்சால் ரசிகர்கள் ஷாக்

Samuthirakani

தமிழ் சினிமா கோடிகளில் புரள்கிறது. 300 கோடி, 500 கோடி ரூபாய் என, சினிமாவில் முதலீடு செய்யப்பட்டு, புதிய படங்கள் எடுக்கப்படுகிறது. அதில், பல படங்கள் பிளாக் பஸ்டர் மூவியாக வெற்றி பெற்று, இன்னும் பலமடங்கு கூடுதலான லாபம் பெறுகின்றன. இதுபோன்ற அதிக முதலீட்டு படங்களை எடுப்பதில் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் ஆர்வம் காட்டுகின்றனர். இதுமட்டுமின்றி, குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படும் தரமான கதைகள் கொண்ட படங்களும், மிகப்பெரிய வெற்றி பெறுவதும் அடிக்கடி நடந்துக்கொண்டு இருக்கிறது.அந்த வகையில் வீட்ல விசேஷம், டாடா, மாவீரன், விடுதலை, மாமன்னன் போன்ற படங்கள், கதையம்சத்தால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டன. அதனால், அதுபோன்ற யதார்த்த படங்களை சில இயக்குநர்கள் எடுக்க விரும்புகின்றனர். ஆனால், தமிழ் சினிமாவில் யதார்த்த சினிமாக்களுக்கு அதிக முக்கியத்துவம் தரும் இயக்குநர் சமுத்திரக்கனி. நாடோடி, அப்பா போன்ற மிக நல்ல படங்களை தந்தவர். தயாரிப்பாளர், கதை ஆசிரியர், இயக்குநர் போன்ற பன்முக தன்மை கொண்டவர்.இந்நிலையில், சில தினங்களுக்கு முன் மார்க் ஆண்டனி படத்தை இந்தியில் வெளியிட, மும்பையில் உள்ள சென்சார் போர்டுக்கு, ரூ. 6.5 லட்சம் லஞ்சம் கொடுத்ததாக வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இப்போது நடிகர் சமுத்திரக்கனியும் அதே குற்றச்சாட்டை கூறி இருக்கிறார். அப்பா படத்துக்காக, சென்சார் போர்டில் வரிவிலக்கு பெற, நானும் 2106ம் ஆண்டில் லஞ்சம் கொடுத்தேன் என கூறியிருக்கிறார். சினிமாவில் நீதி, நேர்மை, நியாயம் என பேசும் நடிகர்கள் எல்லாமே, இப்படி திரைக்கு பின்னால் தங்களது காரியங்களை சாதித்துக்கொள்ள, இப்படி நேர்மை தவறுவது சரியல்ல, என ரசிகர்கள் கூறத் துவங்கியுள்ளனர்.