ரஜினியை தேடி வந்த குட்டி ரசிகை…. வேற லெவலில் சர்ப்ரைஸ் கொடுத்து அசத்திய ரஜினி…. வைரலாகும் க்யூட் புகைப்படம்….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வளம் வந்து கொண்டிருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரின் நடிப்பில் வெளியான பெரும்பாலான திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான அண்ணாத்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினி இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் இணைந்துள்ளார்.

இந்த திரைப்படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன்,கே எஸ் ரவிக்குமார் போன்ற முன்னணி நடிகர்கள் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.ஜெயிலர்  படத்தின் அறிவிப்பு வெளியாகி பல மாதங்கள் ஆகியுள்ள நிலையிலும் படப்பிடிப்பு தொடங்காமல் இருப்பதாக ரசிகர்கள் கவலை தெரிவித்தனர். தற்போது ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி தொடங்கியது.

ஹைதராபாத்தில் படத்தின் சூட்டிங் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது சென்னையிலேயே பிரம்மாண்டஸ் செட் அமைத்து சூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் குட்டி ரசிகை ஒருவர் அவரை காண ஜெயிலர் சூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்றுள்ளார். அதனை அறிந்த ரஜினி குட்டி ரசிகையை நேரில் சந்தித்து அவருடன் சிறிது நேரம் பேசி ஜாலியாக விளையாடினார்.அதனைத் தொடர்ந்து குழந்தைக்கு ஒரு புத்தகத்தில் தன்னுடைய ஆட்டோகிராபை போட்டு பரிசாக கொடுத்தார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.