தமிழ் சினிமாவில் 80களில் தொடங்கி இன்று வரை பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் சிவகுமார். இவரின் மகன்கள் சூர்யா மற்றும் கார்த்திக் இருவருமே தமிழ் சினிமா உலகில் டாப் நடிகர்களாக உள்ளனர்.இவர்களின் நடிப்பில் வெளியாகும் படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு மற்றும் வசூலை பெற்றுக் கொண்டிருக்கிறது. தந்தையைப் போலவே இருவரும் சினிமாவில் முன்னணி நடிகர்களாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனிடையே சிவகுமாருக்கு மகன்கள் மட்டுமல்லாமல் பிருந்தா என்ற ஒரு மகளும் உள்ளார். சூர்யா மற்றும் கார்த்திக் இருவருக்கும் சகோதரி தான் இவர். சிவக்குமார் தனது மகளை சினிமாத்துறைக்கு கொண்டு வரவில்லை. அதனால் பிருந்தா படிப்பு மற்றும் குடும்பம் என செட்டில் ஆகிவிட்டார். இருந்தாலும் அவர் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார்.

இவர் சமீபத்தில் சினிமாவில் களமிறங்கி ஒரு படத்திற்கு பாடல் பாடியிருந்தார். இந்நிலையில் பிருந்தா பான் இந்தியா படத்தில் களம் இறங்கி இருக்கும் தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது பாலிவுட்டில் பிரம்மாண்டமாக சமீபத்தில் வெளியான பிரம்மாஸ்டரா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை ஆலியா பட்டுக்கு பிருந்தா தான் டப்பிங் கொடுத்துள்ளார்.

இது குறித்து சமூக வலைதள பக்கத்தில் அவர் பதிவு ஒன்றை போட்டு இருந்தார்.இதனைப் பார்த்து அவரின் சகோதரர்களான சூர்யா மற்றும் கார்த்தி இருவருமே வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில் அவர்களை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.