இப்போதான் திருமணம் முடிந்தது….. அதுக்குள்ள விவாகரத்து செய்து பிரியும் பிரபல ஜோடி…. கேட்டதும் ஷாக்கான ரசிகர்கள்….!!!

பாலிவுட் திரை உலகில் அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை தீபிகா படுகோனே. இவர் தமிழ் சினிமாவில் ரஜினி நடிப்பில் வெளியான கோச்சடையான் திரைப்படம் மூலம் அறிமுகமானார். டாப் நடிகைகளின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் இவர் தான். தற்போது முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இரண்டு வருடமாக காதலித்து வந்த இவர்கள் அண்மையில் திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணத்திற்கு பிறகு இருவரும் சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார்கள்.சமீபத்தில் கூட தீபிகா படுகோனே உடல் நலக்குறைவு காரணமாக திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

இந்நிலையில் தீபிகா மற்றும் ரன்வீர் இருவரும் விவாகரத்து பெற்று பிரியப் போவதாக இணையத்தில் செய்திகள் பரவின. அந்தச் செய்தி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர்கள் இருவரும் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். அதாவது ரன்பீர் சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த நிலையில் அதற்கு தீபிகா படுகோனே கமெண்டில், Edible என கேட்டு ஜொள்ளுவிடும் கமெண்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதற்கு அவரும் திரும்ப பதில் அளித்துள்ளார். இதனிடையே இணையத்தில் இந்த செய்தி வெளியான நிலையில் பிரபல ஜோதிடர் ஒருவர்,தீபிகாவின் ராசிப்படி சந்திரனும் சுக்கிரனும் சரியான இடத்தில் இருக்கிறது. அதனால் இருவரும் பிரிவதற்கு வாய்ப்பே இல்லை. ஆனால் குழந்தை பற்றி யோசிக்க அந்த ஜோடி 2024 ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டும் என ஜோதிடர் கூறியுள்ளார்.இந்தச் செய்தி அவர்களின் ரசிகர்கள் மத்தியில் சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.