தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சிம்பு. அவரின் நடிப்பில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் அச்சம் என்பது மடமையடா திரைப்படங்களை தொடர்ந்து இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு தற்போது மூன்றாவது முறையாக நடித்துள்ள படம் வெந்து தணிந்தது காடு. இந்த திரைப்படத்தில் முத்து என்ற கேரக்டரில் சிம்பு நடித்துள்ளார்.

இப்படத்தின் போஸ்டர்,பாடல்கள் மற்றும் டீசர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.இதில் சிம்புவை கிராமம் மற்றும் நகரம் என இரு வேறு கெட்டப்பில் பார்ப்பதற்கு ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றன.

சிம்புவின் அம்மாவாக ராதிகா நடித்துள்ளார். குஜராத் நடிகை சித்தி இட்னானி கதாநாயகியாக நடித்துள்ளார். ஏ ஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்தத் திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன், சிம்பு,ஏ ஆர் ரகுமான் மற்றும் கௌதம் மேனன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
![]()
அப்போது பேசிய சிம்பு கமல்ஹாசனிடம், நான் உங்களது படங்களில் ஏதாவது ஒரு படத்தின் தீமைக்கில் நடிக்க வேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டால் அது எந்த படம் என கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்த கமல்ஹாசன், நீங்கள் இன்னும் நிறைய படம் நடிக்க வேண்டும். அதுதான் எங்களுடைய ஆசை. நீங்கள் ஏதாவது ஒரு படம் நடிக்கணும் என்றால் என் கூட நடிக்கணும் என்று கூறியுள்ளார். இதனைக் கேட்ட அரங்கமே அதிர்ந்து போன நிலையில் கரகோஷங்கள் ஒலித்தன.