நடிகர் சத்யராஜின் மகனும் இளம் நடிகருமான சிபிராஜ் ஸ்டுடென்ட் நம்பர் 1 என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார். அவரது நடிப்பில் ஆரம்பத்தில் வெளியான ஜோர் மற்றும் வெற்றிவேல் சக்திவேல் உள்ளிட்ட படங்கள் தோல்வியை தழுவியது. இதனைத் தொடர்ந்து அவர் நடித்த நாய்கள் ஜாக்கிரதை, ஜாக்சன் துரை ஆகிய படங்கள் வெற்றியடைந்த நிலையில் குறிப்பிட்ட சில கதைகளை தேர்வு செய்து சிபிராஜ் தற்போது நடித்து வருகிறார்.

இந்நிலையில் சத்யராஜ் பேரனும் சிபிராஜின் மகனுமான தீரன் குறும்புத்தனம் செய்யும் வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.அதனை பலரும் பகிர்ந்து தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.