இதை காது கொடுத்து கேட்க கூட யாரும் இல்லை…. இணையத்தை தெறிக்க விடும் பிக்பாஸ் ஜனனியின் கலக்கல் வீடியோ…..!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.இதில் முதலில் 20 போட்டியாளர்கள் களமிறங்கிய நிலையில் பின்னர் புதிய போட்டியாளராக மைனா நந்தினி வீட்டில் நுழைந்தார்.

தினந்தோறும் புதுவிதமான சண்டைகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சியை பரபரப்பாக இருந்த நிலையில் கடந்த வாரம் ஜி பி முத்து மற்றும் சாந்தி மாஸ்டர் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி தற்போது 19 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளன. இந்நிலையில் இலங்கை மீடியாவில் பணியாற்றி வந்த ஜனனி என்பவர் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக களம் இறங்கியுள்ள நிலையில் ரசிகர்கள் முதல் நாளில் இருந்தே அவரை கொண்டாடி வருகிறார்கள்.

அதாவது குட்டி த்ரிஷாவை இப்போதிலிருந்து தாங்குகிறார்கள் என புலம்பத் தொடங்கி விட்டனர். அவ்வப்போது அவர் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள்இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் தற்போது ஜனனி ஒரு பேட்டியில் கலகலப்பாக பேசும் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.