விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிகப் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ். இதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு ஒரு பக்கம் ரசிகர்கள் இருந்தாலும் அதனை தொகுத்து வழங்கும் கமல்ஹாசனுக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ள நிலையில் இதுவரை இதில் ஐந்து சீசன்கள் முடிவடைந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அண்மையில் தொடங்கியது. இதில் ஒன்பது ஆண் போட்டியாளர்கள், 10பெண் போட்டியாளர்கள் மற்றும் ஒரு திருநங்கை என மொத்தம் 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர். இதில் முதல் நாளில் இருந்தே பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு பல டாஸ்க்களை கொடுத்து வருகிறது. முதல் நாளே போட்டியாளர்கள் பலரும் மோதிக்கொண்டனர். அடுத்தது விறுவிறுப்பாக ஓடி கொண்டிருக்கிறது.

இதனிடையே முதல் வாரமே இன்னும் முடிவடையாத நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு முதலாளாக வெளியேறப் போவது யார் என்று இணையத்தில் தகவல் உலாவை ஆரம்பித்துவிட்டது. அடுத்த வாரத்திற்கான நேரடி நாமினேஷனில் ஆயிஷா, விக்ரமன் மற்றும் அசீம் ஆகியோர் உள்ளனர்.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு முதல் நபராக தனலட்சுமி வெளியேறுவார் என்று நெட்டிசன்கள் பலரும் கூறி வருகிறார்கள்.அதாவது நேற்று ஜி பி முத்துவை பார்த்தாலே செம காண்டாகுது என தனலட்சுமி கேமரா முன்பு நின்று கூறினார். அதனைப் பார்த்த ஜிபி முத்து ரசிகர்கள் அடுத்த வார எலிமினேஷனில் தனலட்சுமி சிக்கினால் கண்டிப்பாக அவர்தான் முதல் நபராக வீட்டை விட்டு வெளியேறுவார் என கூறி வருகின்றனர்.
