“இதெல்லாம் ரொம்ப தப்பு”….. பிக்பாஸ் வீட்டில் அமுதவாணன் – ஜனனி செய்த செயல்…. வீடியோவை பார்த்து செம கடுப்பான ரசிகர்கள்….!!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ். அதில் ஆறாவது சீசன் மிக விறுவிறுப்பாக ஓடி கொண்டு இருக்கிறது.முதலில் இந்த நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் முதல் வாரம் ஜி பி முத்து தானாக முன்வந்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். அதனைத் தொடர்ந்து முதல் வார பிக் பாஸ் நாமினேஷனில் இடம்பெற்று இருந்த சாந்தி வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து இரண்டாவது வாரம் பெண்களிடம் பல சில்மிஷம் செய்து சர்ச்சையில் சிக்கிய அசல் கோளாறு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். அதனைப் போலவே இந்த வாரம் நாமினேஷன் செய்யப்பட்டு மக்களிடம் மிகக் குறைந்த வாக்குகளை பெற்ற செரீனா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் அமுதவாணன் மற்றும் ஜனனி செய்திருக்கும் செயல் ஒன்று இணையத்தில் வைரலாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்திலிருந்து இலங்கை தமிழ் பெண்ணான ஜனனிக்கு தனி ஒரு ரசிகர் பட்டாலும் உள்ளது. அதனைப் போலவே அமுதவாணன் விஜய் டிவியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்.

இவர்கள் இருவரும் பிக் பாஸ் வீட்டில் தொடக்கத்தில் இருந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்று வரும் நிலையில் இருவரும் இரவு நேரத்தில் மைக்கை மாட்டாமல் பேசிக் கொண்டிருக்கும் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. இதனைப் பார்த்து ரசிகர்கள் கடுப்பாகி கேள்வி எழுப்பி வருகின்றனர்.

https://twitter.com/ViberPost/status/1588657056760090624