இது வேற லெவல்…. படத்திற்காக 120 அடி உயரத்தில் ரிஸ்க் எடுத்த ஆர்யா…. இணையத்தில் மாஸ் கிளப்பும் புகைப்படம் இதோ….!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஆர்யா. அவர் இறுதியாக நடித்த திரைப்படம் டெடி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்தத் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது முறையாக நடிகர் ஆர்யா மற்றும் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் கூட்டணியில் கேப்டன் திரைப்படம் உருவாகியுள்ளது. படத்தின் போஸ்டரில் விசித்திரமான கொடூர விலங்கு இடம்பெற்று இருப்பதால் சயின்ஸ் பிக்சன் திரில்லர் படமாக வெளியாகும் என்று ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இந்தத் திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வருகின்ற செப்டம்பர் மாதம் எட்டாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட உள்ளது. இதற்கு டி இமான் இசையமைத்துள்ளார். கேப்டன் திரைப்படத்தில் ஆர்யாவுடன் இணைந்து ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சிம்ரன், காவியா செட்டி, ஹரிஷ் உத்தமன்,கோகுல் மற்றும் பரத்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தற்போது படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இறுதி கட்ட பணிகள் முழுவீச்சில் நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் கேப்டன் திரைப்படத்திற்காக பல சவாலான ஆக்ஷன் காட்சிகளில் நடிகர் ஆர்யா நடித்துள்ளார். மூணாறில் உள்ள ஏரியில் 120 அடி உயரத்தில் டிசம்பர் மாத குளிரில் கொட்டும் மழையில் நனைந்தபடி நடைபெற்ற படப்பிடிப்பில் அதிக ரிஸ்க் எடுத்து ஆர்யா நடித்துள்ளதாக இயக்குனர் சக்தி சௌந்தரராஜ் தெரிவித்துள்ளார். மேலும் அந்த சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.