லோக்கல் ரயிலில் அனன்யா பாண்டே மடியில் விஜய் தேவரகொண்டா… திடீர் பயணம்…. என்ன காரணம் தெரியுமா?…..!!!

நடிகர் விஜய் தேவரகொண்டா அண்மையில் நடித்த லைகர் படத்தின் வெளியீட்டை தொடர்ந்து படக் குழுவினர் பல்வேறு ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்கள். அவ்வகையில் அண்மையில் நடைபெற்ற காபி வித் கரன் என்ற நிகழ்ச்சியில் விஜய் தேவரகொண்டா மற்றும் அனன்யா பாண்டே கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனைத் தொடர்ந்து மும்பை லோக்கல் ரயிலில் பயணம் செய்து பழத்தின் பிரமோஷன் நிகழ்வுகளில் விஜய் தேவரகொண்டா மற்றும் அனன்யா பாண்டே பங்கேற்றனர். இருவரும் மும்பை லோக்கல் ரயிலில் பயணம் செய்த புகைப்படங்களை அனன்யா பாண்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் அனன்யா பாண்டேவின் மடியில் படுத்து விஜய் தேவார கொண்டா சிறிது நேரம் பயணம் செய்துள்ளார்.

உலகின் பிரபல குத்து சண்டை வீரர் மைக் டைசன் இந்திய திரையில் முதல் முறையாக அறிமுகமாகும் இந்த திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக அனன்யா பாண்டே நடித்துள்ளார். மேலும் ரம்யா கிருஷ்ணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். லைகர் திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம்,இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வருகின்ற ஆகஸ்ட் 25ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.