இது வேற லெவல்…. டாப் நடிகர்களை பின்னுக்கு தள்ளிய தனுஷ்…. தமிழ் நடிகர்கள் யாரும் இதுவரை செய்யாத சாதனை….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் தமிழ் சினிமா மட்டும் அல்லாமல் கோலிவுட் வட்டாரத்திலும் கலக்கி வருகிறார். இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான தி கிரே மேன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை தேடி தந்தது. தற்போது தனுஷ் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம்.

கடந்த மாதம் 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனிடையே தனுஷ் நடிப்பில் செல்வதாக இயக்கத்தில் உருவாகியுள்ள நானே ஒருவன் திரைப்படம் செப்டம்பர் 29ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில் ட்விட்டரில் சமூக வலைத்தளத்தில் தனுஷை பின் தொடர்வோர் எண்ணிக்கை 11 மில்லியன் அதாவது 1.10 கோடியை தாண்டி உள்ளது. இது தமிழ் நடிகர்கள் யாரும் செய்யாத சாதனையாக பார்க்கப்படுகிறது. தளபதி விஜய்க்கு ட்விட்டரில் நாளும் மில்லியன் ஃபாலோயர் உள்ளன. ரஜினி 62 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். சமந்தாவுக்கு 10 மில்லியன் ஃபாலோயர்ஸ் மற்றும் சூர்யாவுக்கு 8.1 மில்லியன் ஃபாலோயர் உள்ளன.இந்நிலையில் ட்விட்டரில் அதிக அளவில் பாலோயர்சை பெற்றுள்ள நடிகர் தனுசுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.