இது வேற லெவல்… சந்திரமுகி 2 படத்தில் இவங்க தான் ஹீரோயின்…. குஷியில் ரசிகர்கள்….!!!!

கடந்த 2005ஆம் ஆண்டு பி வாசு இயக்கத்தில் வெளியான படம் சந்திரமுகி. ரஜினிகாந்த், ஜோதிகா, பிரபு, நாசர், நயன்தாரா, வடிவேலு உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். இந்தப் படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானது. இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாகவும், வைகை புயல் வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்கும் சந்திரமுகி 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு மைசூரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மைசூரில் தொடங்கியது.

இந்தத் திரைப்படத்தை லைகா ப்ரொடக்ஷன் சார்பாக தயாரிப்பாளர் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் கதாநாயகியாக பிரபல நடிகை லட்சுமிமேனன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குச்சிப்புடி நடன கலைஞரான லட்சுமி மேனன் சந்திரமுகி 2 படத்தில் நடிப்பதாக வெளியாகி உள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.