துளு நாட்டை சேர்ந்த நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, விக்ரமுடன் இணைந்து கோப்ரா படத்தில் நடித்துள்ளார். மிஸ் கர்நாடகா பட்டம் பெற்ற இவர் முதலில் கே ஜி எஃப் படத்தின் மூலம் கன்னட சினிமாவில் அறிமுகமானார். இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கிய கே ஜி எஃப் சாப்டர் 2 படத்தில் யஷ் அவர்களுக்கு ஜோடியாக இவர் நடித்துள்ளார்.

இந்த படம் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அது மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் 1800 கோடி ரூபாய் வசூல் செய்து மிகப் பெரிய சாதனையை படைத்தது. இந்நிலையில் நடிகை ஸ்ரீநிதி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் கருப்பு நிற சேலையில் அவர் தோற்றமளிக்கிறார். ரசிகர்களை சுண்டி இழுக்கும் இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தை ரசிகர்கள் ஷேர் செய்து வருகிறார்கள்.
