“இதெல்லாம் ரொம்ப ஓவர்”…. திருமணம் முடிந்த கையோடு அமீர் – பாவணி…..Photos பார்த்ததும் பொங்கி எழுந்த நெட்டிசன்கள்….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பெரும்பாலான நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அவ்வகையில் கோடிக்கணக்கான ரசிகர்களால் விரும்பி பார்க்கப்பட்ட நிகழ்ச்சி தான் பிக் பாஸ். அதில் இதுவரை 5 சீசன்கள் முடிவடைந்த நிலையில் விரைவில் ஆறாவது சீசன் தொடங்க உள்ளது. இதனிடையே பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் தான் பாவனி மற்றும் அமீர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி சீரியல் இன் மூலம் அறிமுகமானவர் பாவனி. பின்பு பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் வைல் கார்டு என்ட்ரி மூலம் உள்ளே வந்தவர் அமீர். அதன் பிறகு அவர் பாவனியிடம் நெருக்கமாக பழகியதால் இருவரும் காதலிக்கிறார்கள் என்று பலரும் கூறி வந்தனர். பிக் பாஸ் முடிந்த பிறகும் கூட இருவரும் வெளியிடங்களில் ஒன்றாக தான் சுற்றி வருகிறார்கள்.

அண்மையில் விஜய் டிவியில் தொடங்கப்பட்ட பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொண்டு நடனமாடி வருகிறார்கள். பல்வேறு வேடங்களில் அந்நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அசத்தி வருகின்றனர். அதன்படி அமீர் மற்றும் பாவணி இருவரும் பல்வேறு வேடங்கள் அணிந்து இதுவரை நடனமாடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளனர்.

இந்நிலையில் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பாவனிக்கு அமீர் ப்ரொபோஸ் செய்வது போன்ற வீடியோக்களும் இணையத்தில் வெளியானது. இதற்கு அடுத்த கட்டமாக தனது காதலை விஜய் டிவியில் வெளிப்படுத்தியவர் செட்டிலையே திருமணத்தை நடத்தி முடித்து விட்டார் . அதாவது பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இவர்களின் திருமணம் நடைபெறுவது போன்ற காட்சி இடம்பெற்றது.

அந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாகிய நிலையில் ரசிகர்கள் பலரும் எப்போது ரியல் திருமணம் என்று கமெண்ட் செய்து வந்தனர். இதையெல்லாம் தாண்டி அடுத்த கட்டமாக இந்த வாரம் மனக்கோளத்தில் போட்டியாளர்கள் கலந்து கொள்ள உள்ளதால் அமீர் மற்றும் பாவணி இருவரும் கேரவனுக்குள் ரொமான்டிக் பார்வையால் கொஞ்சு குலாவும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

அந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் பலரும் இது எங்கே போய் முடியப் போகிறதோ என்று பொங்கி எழுந்து கமாண்ட் செய்து வருகிறார்கள். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.