தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. இவரின் நடிப்பில் அண்மையில் உருவாகியுள்ள திரைப்படம் லைகர். இந்தத் திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த நடிகர் விஜய் தேவரகொண்டா, சென்னைக்கு நான் வந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. நோட்டா படத்தின் சூட்டிங் நடந்தபோது நாம் கொஞ்சம் கொஞ்சம் தமிழ் கற்றுக் கொண்டேன்.

தற்போதும் கற்றுக் கொண்டிருக்கிறேன். லைகர் திரைப்படம் மரண மாஸ் சினிமாவாக இருக்கும் என நம்புகிறேன். இந்த படத்தின் ஸ்கிரிப்ட் கேட்ட உடன் எனக்கு மிகவும் பிடித்தது.பேச்சு குறைபாடு இருப்பவர்களுக்கு இந்த படம் கட்டாயம் நம்பிக்கையை கொடுக்கும் என்று மனம் மகிழ்ந்து பேசி உள்ளார். இதனைத் தொடர்ந்து அவரிடம் தமிழில் யாருடன் இணைந்து படம் நடிக்க ஆசைப்படுகிறீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அவர், லோகேஷ் கணகராஜ்,வெற்றிமாறன் மற்றும் பா ரஞ்சித் போன்ற தமிழ் இயக்குனர்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர்களிடம் பலமுறை போனில் பேசியுள்ளேன். அவர்கள் விரும்பினால் நான் படத்தில் அவர்களுடன் இணைந்து நடிக்க ஆவலாக காத்திருக்கிறேன்.

அதுவரை தமிழில் டப்பிங் செய்து படங்களை வெளியிட்டு வருகின்றேன். குறிப்பாக லோகேஷ் அவரது யுனிவர்சல் கொண்டு வந்தால் அதில் பயணிக்க நான் இப்போதும் தயாராக இருக்கிறேன் என்றும் அது விரைவில் நடக்கும் என தோன்றுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். அவர் பேசிய அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.