விஜய்க்கு சூப்பர் ஹிட் கொடுத்த முதல் திரைப்படம் இதுதான்…. அதுவும் எத்தனை கோடி வசூல் தெரியுமா?…. இதோ பாருங்க….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி என்று அனைவராலும் அறியப்படும் நடிகர் விஜய். இவரின் அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் ஹிட் கொடுக்கும். அவ்வகையில் இவரின் அடைப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் பீஸ்ட். ஆனால் அந்த திரைப்படம் எதிர்பார்த்து அளவிற்கு ஓடவில்லை.

இதனைத் தொடர்ந்து தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார் விஜய். மிகப்பெரிய எதிர்பார்ப்பை எதிர வைத்து வரும் இந்த திரைப்படம் வருகின்ற 2003 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இப்படத்தில் ராஷ்மிகா, சரத்குமார், பிரகாஷ்ராஜ் மற்றும் பிரபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தை முடித்த கையோடு அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் விஜய் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விஜயின் திரை வாழ்க்கையில் முக்கியமான திரைப்படங்கள் பல உள்ளன.

அதில் முதலிடம் வகிப்பது தான் கில்லி. தரணி இயக்கிய இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி அடைந்தது. இந்த திரைப்படம் வெளியாகி 18 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்தத் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் சுமார் 54 கோடி வரை வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்துள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகி உள்ளது. அது மட்டுமல்லாமல் விஜய் நடித்த திரைப்படங்களில் முதன்முதலாக 50 கோடி வசூல் செய்த திரைப்படம் இதுதான் என்றும் கூறப்படுகிறது.