இவருக்காக இந்த நிலை?…. திடீரென மத போதகராக மாறிய 90ஸ் கனவு கன்னி…. அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்…..!!!!

தென்னிந்திய சினிமாவில் கொடி கட்டி பறந்தவர் நடிகை மோகினி. 90களில் பல்வேறு படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் முதன்முதலாக ஈரமான ரோஜாவே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆனார்.

குறிப்பாக 90 காலகட்டங்களில் இளைஞர்களின் கனவு கன்னியாக பலம் வந்தவர். இவருக்கு இயல்பாகவே நீல நிறத்தில் இருப்பதால் பூனை கண்ணழகி என்றும் செல்லமாக அழைக்கப்பட்டார். தமிழில் வெளியான புதிய மன்னர்கள் மற்றும் நாடோடி பாட்டுக்காரன் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

வெள்ளி திரையிலிருந்து சின்னத்திரைக்கு வந்த இவர் சன் தொலைக்காட்சியில் காதல் பகடை மற்றும் ராஜராஜேஸ்வரி உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார். இவர் பரத் என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவிற்கு குடியேறினார். திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்தும் விலகினார்.

இந்நிலையில் இவர் அமெரிக்காவில் கிறிஸ்துவ மத போதகராக தற்போது மாறி உள்ளாராம். இது தொடர்பாக ஒரு பேட்டியில் மோகினி கூறியதன் மூலம் அவர் மத போதகராக மாறி உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.

இவருக்கு ருத்ர கேஸ் என்ற ஒரு மகனும் இருக்கின்றார். இளைஞர்களின் கனவு கன்னியாக விளங்கிய 90ஸ் நடிகை தற்போது திடீரென மத போதகராக மாறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.