SIIMA விருதுகளில் தூள் கிளப்பும் பிரபல நடிகரின் திரைப்படம்…. வெளியான திடீர் அறிவிப்பால்….. படு குஷியில் படக்குழுவினர்….!!!!

நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் புஷ்பா. இந்த படம் செம்மரம் கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. ஒரு பக்கம் அல்லு அர்ஜுன் ஆக்ஷனில் களமிறங்க மறு பக்கம் ராஸ்மிகா மந்தனா ரொமான்ஸில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

இவர்களுக்கு இடையே ஒரு பாடலுக்கு சமந்தா குத்தாட்டம் போட்டிருந்தார். “ஊ சொல்றியா மாமா”என்ற பாடல் பட்டி தொட்டி எல்லாம் வைரலானது. இந்த படம் மிகப்பெரிய ஹிட் ஆனதற்கு இந்த பாடலும் சமந்தாவின் குத்தாட்டமும் ஒரு காரணம்தான். விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.இதனை தொடர்ந்து புஷ்பா 2 படத்தை எடுப்பதற்கு படக்குழு முடிவு செய்ததுள்ளது.

இந்நிலையில் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தெலுங்கு திரைப்படமான புஷ்பா 12 பிரிவுகளில் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தி ரைஸ்’ பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் முன்னணியில் உள்ளது. செப்டம்பர் 10-11 தேதிகளில் பெங்களூரில் நடைபெறவுள்ளது.

இதனை அடுத்து பாலகிருஷ்ணா நடித்த அகண்டா படம் 10 பிரிவுகள், ஜாதி ரத்னலு, உப்பென்னா திரைப்படங்கள் தலா எட்டு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அதனைப் போலவே மலையாளத்தில் மின்னல் முரளி திரைப்படம் 10 பிரிவுகளின் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.