இந்த உலகில் பன்முகத் தன்மை கொண்ட நாடு என்றால் அது இந்தியா தான் என்று தாராளமாக கூறலாம். இந்தியாவில் பல்வேறு வகையான மொழி, கலாச்சாரம் மற்றும் சமயம் என அனைத்துமே உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் சிறந்து விளங்கும் மாநிலங்களின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவின் பணக்கார மாநிலங்கள், அவற்றின் வலிமை என்ன,இந்த மாநிலங்களுக்கு எப்படி வருவாய் கிடைக்கிறது என்பது குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் முதல் இடத்தில் பணக்கார மாநிலங்கள் பட்டியலில் இருப்பது மகாராஷ்டிரா. இதன் ஜிடிபி 35.82 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இங்கு சுமார் 45 சதவீத மக்கள் நகரப் பகுதியில் வசிக்கின்றன. மாநிலத்தின் வருவாயில் விவசாயம் மட்டுமே சுமார் 51 சதவீதம், தொழில்துறை ஒன்பது சதவீதமும் சேவைகள் துறை 40 சதவீதமும் வருவாய் கொடுக்கின்றது.
அடுத்ததாக இரண்டாவது இடத்தில் இருப்பது தமிழ்நாடு. தமிழகத்தின் தற்போதைய ஜிடிபி 24.84 லட்சம் கோடி ரூபாய். இதில் 45 சதவீதம் சேவை துறையும், 34 சதவீதம் உற்பத்தி துறையும், 27 சதவீதம் விவசாயத் துறையும் பங்கு வகிக்கின்றன. இங்கு 50 சதவீத மக்கள் நகரப் பகுதியில் வசிக்கின்றன.
மூன்றாவது இடத்தில் இருப்பது குஜராத். இதன் ஜிடிபி 22 லட்சம் கோடி. விவசாய மற்றும் தொழில்துறை புகையிலை, பருத்தி ஆடைகள் மற்றும் பாதாம் உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது. இந்தியாவில் தயாரிக்கப்படக்கூடிய மருந்துகளில் மூன்றில் ஒரு பங்கு மருதுகள் குஜராத்தில் தான் தயாரிக்கப்படுகின்றன. இதன் ஜிடிபி 22 லட்சம் கோடி ரூபாய்.

நான்காவது இடத்தில் இருப்பது கர்நாடகா. இதன் ஜிடிபி 18. 66 லட்சம் கோடி ரூபாய். அதில் ஐடி, வேளாண், விண்வெளி, ஜவுளி மற்றும் ஆடை, பொறியியல் தொழில்கள் உள்ளிட்ட பல முக்கிய தொழில்கள் பங்கு வகிக்கின்றன.
ஐந்தாவது இடத்தில் இருப்பது உத்திரபிரதேசம். இதன் ஜிடிபி 15 புள்ளி 80 லட்சம் கோடி ரூபாய். நொய்டா மற்றும் காசியாபாத் உள்ளிட்ட நகரங்கள் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களின் பட்டியலில் இருக்கின்றன. இங்கு வருமானத்தில் கைத்தறி, கைவினைப் பொருட்கள் மற்றும் விவசாயமாகியவை பங்களிக்கின்றன.
ஆறாவது இடத்தில் இருப்பது மேற்கு வங்காளம். இதன் ஜிடிபி 13.14 லட்சம் கோடி ரூபாய். விவசாயம் மற்றும் நடுத்தர தொழில் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. மாநிலத்தின் சேவை துறையில் 53 சதவீதம்,விவசாயத்துறை 21 சதவீதம் மற்றும் தொழில்துறை 26 சதவீதமாக உள்ளது.
ஏழாவது இடத்தில் இருப்பது ராஜஸ்தான் மாநிலம். இதன் ஜிடிபி 10.21 லட்சம் கோடி ரூபாய். கனிம வளம் நிறைந்த மாநிலம் பொருளாதாரம், விவசாயம், குரங்கம் மற்றும் சுற்றுலாவை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வருகிறது. அது மட்டுமல்லாமல் தங்கம், வெள்ளி, பளிங்கு கற்கள், சுண்ணாம்பு கற்கள்,ராக் பாஸ்பேட்,தாமிரம் மற்றும் லிக்னைட் படிவங்கள் நிறைந்துள்ளன. மேலும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் முக்கிய நகரமாக திகழ்கிறது.

எட்டாவது இடத்தில் இருப்பது ஆந்திர பிரதேச மாநிலம். இதன் ஜிடிபி 9.73 லட்சம் கோடி ரூபாய். இங்கு 62% மக்கள் விவசாயத்துடன் தொடர்பு கொண்டு உள்ளன. தொழில் தொடங்குவதில் சிறந்த மாநிலம் இதுதான். இந்தியாவில் 70% இறால் உற்பத்தி இந்த மாநிலம் தான் செய்கிறது .
ஒன்பதாவது இடத்தில் இருப்பது தெலுங்கானா. இதன் ஜிடிபி 10.49 லட்சம் கோடி ரூபாய். இங்கு மிகப் பெரிய நதிகள் ஆன கிருஷ்ணா மற்றும் கோதாவரி உள்ளதால் அதிக அளவிலான பாசன வசதி உள்ளது. ஐடி சேவைகள் மற்றும் பயோ டெக்னாலஜி துறையில் இந்த மாநிலம் வேகமாக வளர்ந்து வருகிறது.
பத்தாவது இடத்தில் இருப்பது மத்திய பிரதேசம். இதன் ஜிடிபி 11 புள்ளி 32 லட்சம் கோடி ரூபாய். நாட்டிலேயே வைர உற்பத்தி செய்யும் ஒரே மாநிலம் இதுதான். ஜிடிபி சேவை துறையில் 37 சதவீதம் விவசாயத்துறை, 62% தொழில் துறை உள்ளது.இதனைத் தொடர்ந்து அடுத்த இடத்தில் கேரளா மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்கள் உள்ளன.