தமிழ் சினிமாவில் எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் தயங்காமல் நடித்து கலக்குபவர் விஜய் சேதுபதி. முன்னணி ஹீரோவாக பலம் வந்தாலும் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் நடிப்பார். சமீபத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் சாந்தமாகவும்,மற்றொரு பக்கம் விக்ரம் படத்தில் மிரட்டும் வில்லனாகவும் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார்.

அது மட்டுமல்லாமல் பேட்ட, மாஸ்டர் மற்றும் விக்ரம் போன்ற படங்களில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். அவருக்கு வில்லனாக நடிக்கும் வாய்ப்பு மற்ற மொழி படங்களில் இருந்து குவிந்து வருகிறது. அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகவிருக்கும் புஷ்பா 2 படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளாராம். ஏற்கனவே முதல் பாகத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க இருந்ததாகவும்,சில தவிர்க்க முடியாத காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போனதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் புஷ்பா 2 படத்தில் விஜய் சேதுபதி வாங்க உள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது விஜய் சேதுபதி புஷ்பா 2 படத்திற்காக 35 கோடிக்கு மேல் சம்பளம் வாங்க உள்ளாராம். வழக்கமாக ஹீரோவாக நடிப்பதற்கு வாங்கும் சம்பளத்தை விட வில்லனாக நடிப்பதற்கு விஜய் சேதுபதி அதிக சம்பளம் வாங்குகிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
