வேற லெவலில் ஹிட்டான “திருச்சிற்றம்பலம்”…. உலகளவில் இவ்வளவு வசூலா?….. பாக்ஸ் ஆபீஸில் மாஸ் காட்டும் தனுஷ்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் தமிழ் சினிமா மட்டும் அல்லாமல் கோலிவுட் வட்டாரத்திலும் கலக்கி வருகிறார். இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான தி கிரே மேன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை தேடி தந்தது. தற்போது தனுஷ் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம்.

இந்தத் திரைப்படம்அண்மையில்  திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் தமிழக உரிமத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் சார்பாக உதயநிதி ஸ்டாலின் கைப்பற்றியுள்ளார். மேலும் இப்படத்தில் டெலிவரி பாய் கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்துள்ளார். இயக்குனர் இமயம் பாரதிராஜாவும் நடிகர் பிரகாஷ்ராஜும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இதில் தனுசுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், நித்யா மேனன் மற்றும் ராக்ஷி கண்ணா ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ள இப்ப படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஓ பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.  இந்நிலையில் கடந்த மாதம் 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தத் திரைப்படம் 94.25 கோடிக்கு மேல் உலகம் முழுவதும் வசூல் செய்துள்ளதாகவும் தனுஷின் ஹிந்தி பிளாக் பாஸ்டர் ரஞ்சனாவுக்கு பிறகு உலக அளவில் அவர் செய்த மிகப்பெரிய வசூல் இதுதான் என்றும் கூறப்படுகிறது. மேலும் விரைவில் 100 கோடி பாக்ஸ் ஆபீஸில் இந்த திரைப்படம் இறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தனுஷ் நடித்துள்ள நாணயம் ஒருவன் திரைப்படம் இந்த வருடம் வெளியாக உள்ள நிலையில் இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடிக்க உள்ளார்.