இன்னும் இரண்டே மாதத்தில் ஹன்சிகாவுக்கு டும் டும்…. அதுவும் பிரம்மாண்டமான இடத்தில்…. மாப்பிள்ளை யார் தெரியுமா…..????

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக பலம் வந்து கொண்டிருப்பவர் சின்ன குஷ்பூ என்று பெயரை பெற்றுள்ள நடிகை ஹன்சிகா. இவர் முதலில் நடிக்க வந்தபோது கொழுக் முழுக் என்று இருந்ததால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். ஆரம்பத்தில் முன்னணி நடிகையாக பலம் வந்த இவர் ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் இல்லாமல் திணறினார். இவர் குண்டாக இருக்கிறார் இவருக்கு சரியாக நடிப்பு வரவில்லை என்று பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இதனிடையே விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு ஹன்சிகா உடல் எடையை குறைத்த நிலையில் அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. தமிழ் மற்றும் தெலுங்கு என அடுத்தடுத்து சிறப்பான படங்களில் நடித்து வந்த இவர் விஜய் மற்றும் ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

தற்போது ஹன்சிகா நடிப்பில் பார்ட்னர், மை நேம் இஸ் சுருதி, ரவுடி பேபி உள்ளிட்ட படங்கள் உருவாக உள்ளன. சமீபத்தில் இவரின் 50வது படமான மகா திரைப்படம் வெளியானது. நடிப்பில் பிசியாக இருக்கும் இவர் எப்போதுமே சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பது வழக்கம். அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் ஹன்சிகாவுக்கு வருகின்ற டிசம்பர் மாதம் மிகப் பிரமாண்டமாக திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜெய்ப்பூரில் உள்ள 450 வருட பழமையான mundota fort and palace இல் ஹன்சிகா திருமணம் நடைபெற உள்ளது.அதற்கான ஏற்பாடுகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருவதாக இணையத்தில் தகவல் தீயாய் பரவி வருகிறது. இருந்தாலும் அவர் யாரை திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.